ஜூன் 11-ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

54பார்த்தது
ஜூன் 11-ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 11ம்தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் என்பது குறைந்திருப்பது மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளை கவலை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி