தமிழக பட்ஜெட் - பள்ளிக் கல்விதுறை அறிவிப்புகள்

80பார்த்தது
தமிழக பட்ஜெட் - பள்ளிக் கல்விதுறை அறிவிப்புகள்
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில், இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்; இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். மேலும் பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி