தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்க திட்டம்

7567பார்த்தது
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்க திட்டம்
தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவர் அல்லது பொறுப்பு தலைவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து அக்கட்சியின் தேசிய தலைமை ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக அண்ணாமலை நான்கு மாதங்கள் லண்டன் செல்ல இருக்கிறார். இதனால், மாற்று தலைவருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்த நிலையில் அவர் தான் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி