சைக்கிள் சின்னம் கோரி தமாகா வழக்கு!

34176பார்த்தது
சைக்கிள் சின்னம் கோரி தமாகா வழக்கு!
2024 மக்களவை பொதுத்தேர்தலில் 'சைக்கிள் சின்னம்' ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தொடந்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், சைக்கிள் சின்னம் வழங்கக்கோரி மனு அளித்தும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தல் போல், இந்த தேர்தலில் அதே சின்னத்தை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி