முருங்கையின் பூக்கள், விதைகள், இலைகள், காய்கள் மற்றும் வேர்கள் அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. நரம்பு தளர்ச்சி நீங்க முருங்கைக் காய் மிகவும் உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். முருங்கை இலையில் உள்ள இன்சுலின் போன்ற ஒரு பொருள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் இதயத் துடிப்பையும் சீராக்குகிறது. முருங்கையில் காணப்படும் குளோரோபில் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.