தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 விழுக்காடு முதலீட்டு மானியம் அதிகப்பட்சமாக ரூ.50 இலட்சம் வரை வழங்கப்படும். தமிழ்நாட்டின் எப்பகுதியிலும் தொடங்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் 13 வகையான உந்துதல் தொழில்களை மேற்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். அரசால் அறிவிக்கப்பட்ட 251 தொழிலில் பின்தங்கிய வட்டாரங்களில் ஆரம்பிக்கப்படும் அனைத்து புதிய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.