முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் மகள் சனா சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஜன.3 வெள்ளிக்கிழமை இரவு, டைமண்ட் ஹார்பர் ரோடு பகுதியில் சனா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெஹாலா சந்திப்பில் கொல்கத்தாவில் இருந்து ரைசாக் நோக்கிச் சென்ற பேருந்து சனாவின் கார் மீது மோதியது. இதையடுத்து நிற்காமல் சென்ற பஸ்சை சனாவின் கார் டிரைவர் விரட்டிப் பிடித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பஸ் டிரைவரை கைது செய்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.