2025ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியானது புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று (ஜன.04) நடந்தது. இந்நிலையில் போட்டி நடந்துகொண்டிருந்தபோது மேடையில் இருந்த இரு தரப்பினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் சிலர் மேடை ஏறியதற்கு விழாக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாற்காலிகளை கொண்டு போலீசார் முன்னிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.