தரமான காபித்தூளில் பில்டர் பாத்திரத்தில் டிக்காஷன் தயார் செய்து அதை டிகிரி பாலில் கலப்பது தான் கும்பகோணம் டிகிரி காபியின் தனிச்சுவைக்குக் காரணமாக இருக்கின்றது. தற்போதும் பாலில் டிகிரி பார்க்கும் பழக்கம் உள்ளது. பாலில் தண்ணீர் கலந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க, லேக்டோமீட்டர் கருவியை பயன்படுத்துகிறார்கள். மக்கள் தரமான சுவையை 'டிகிரி காபி கொடுங்க' என்று குறிப்பிட்டுக் கேட்க, அதே பெயர் நிலைத்தது.