நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்துவட்டி புகாரில் நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள், அவரது தந்தை தங்கப்பாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இடைத்தரகர் நாராயணனுக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் நெருக்கமாக பழகி ஆபாசம் எடுத்து மிரட்டிய பாலியல் வழக்கில் காசிக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.