குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

74பார்த்தது
மதுரையில் தடையை மீறி பேரணி நடத்திய பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மேற்கு கிராம உதவியாளர் ஜலபதி அளித்த புகாரின் பேரில், தடையை மீறி பேரணி நடத்தியது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் குஷ்பு உள்ளிட்ட 317 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதியை கண்டித்தும் 'நீதிக்கான பேரணியை' பாஜக மகளிர் அணியினர் நேற்று (ஜன., 03) நடத்தினர்.

தொடர்புடைய செய்தி