சாத்தூர் அருகே அப்பயநாயகன்பட்டி அருகே உள்ள சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் 4 கட்டிடங்கள் தரைமட்டமான நிலையில் உள்ளன. வேறு யாரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பட்டாசு ஆலையின் மூலப்பொருட்கள் வைக்கும் அறையில் வெடிவிபத்து ஏற்பட்டதாகவும், மீட்புப் பணிகள் முடிந்த பின்னரே விபத்து குறித்த காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.