1975 மற்றும் 1998 ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்காற்றிய மூத்த விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் இன்று (ஜன., 04) காலமானார். அவருக்கு வயது 88. மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் இருந்தார். சிதம்பரம் 1975 மற்றும் 1999 இல் பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்.