விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த லியா லட்சுமி (4) என்ற சிறுமி பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து உள்ளே விழுந்ததில் உயிரிழந்தார். இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலானது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.