மதுரை அதிமுக வேட்பாளருக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை

59பார்த்தது
மதுரை அதிமுக வேட்பாளருக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை
மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஏற்கனவே மதுரை எம்.பியாக உள்ள சு. வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுரை எம்.பி. நிதி ரூ.17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ரூ.5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என சரவணன் பிரச்சாரத்தின்போது குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சு.வெங்கடேசன், உண்மையில் ரூ.17 கோடியில் 245 திட்டங்கள், ரூ.16.96 கோடி கிட்டத்தட்ட 100% பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி