தோட்டத் தொழிலாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்த மம்தா

50பார்த்தது
தோட்டத் தொழிலாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்த மம்தா
மக்களவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரியில் இன்று(ஏப்ரல் 3) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். அவர்களுடன் தேயிலை பறித்த மம்தா, அவர்களுக்காக சாலையோரக் கடையில் தேநீர் தயாரித்து அவர்களுக்கு பரிமாறினார். மேலும், ஜல்பைகுரி மக்களுடன் இணைந்து மேளம் வாசித்து அவர்களுடன் நடனமாடினார். மேலும் அங்கிருந்த பள்ளிக் குழந்தைகளுடனும் கலந்துரையாடினர்.

தொடர்புடைய செய்தி