மாட்டிக்கினாரு ஒருத்தரு.. திகைத்த திருடன் (வீடியோ)

1070பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை கூட்டு ரோடு அருகே ரிஷ்வன் என்பவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று உள்ளது. இந்நிலையில் உணவகத்திற்கு சாப்பாடு வாங்க வந்த 50 வயது முதியவர் ஒருவர் கடையை நோட்டமிட்டார். சிலிண்டர் காலியான நிலையில் அதனை மாற்ற ரிஷ்வன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த முதியவர் மெதுவாக கல்லா பெட்டியை திறந்து பணத்தை எடுக்க முயன்றார். இதனை உரிமையாளர் பார்த்துவிட, பரோட்டா குடுங்க என கேட்பது போல் நடித்தார் முதியவர். அதற்கு ரிஷ்வன் "யோவ் கேமரா இருக்குயா, மாட்டிக்கப்போற. பொளந்துடப்போறாங்க" என கேஷுவலாக கூறிவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி