தமிழகத்தில் கடந்த இரு வாரத்தில், 134 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஈடுபட்டவர்களிடம், ரூ.1.23 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மின் திருட்டை தடுக்கும் பணியில், மின் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதம், 5ஆம் தேதி சென்னையில் மட்டும் மின் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்ததில், 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, 15.68 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.