கல்விக்காக அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டினரின் பட்டியலில் 2,90,000 மாணவர்களுடன் சீனா முதலிடத்தையும், 2,60,000 மாணவர்களுடன்
இந்தியா 2ம் இடத்திலும் உள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் நடப்பு கல்வியாண்டில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் தொடர்பான படிப்புகளையே இந்திய மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 இல் இந்த பட்டியலானது இன்னும் உச்சத்தை தொடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.