கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவி தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கில் மாடியில் இருந்து குதித்தாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.