மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் ரூ.2.30 லட்சம் வரையிலான மானியத்துடன் 1 லட்சம் மலிவு விலையிலான வீடுகளைக் கட்டுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் சில வருமான வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, பேங்க் அக்கவுண்டு, வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், தங்கள் நிலத்தில் வீடு கட்டுபவர்களாக இருந்தால் நில உரிமை ஆவணங்கள் தேவைப்படும்.