காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் - முனியம்மா தம்பதியின் மகன் முனுசாமி. இவர் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் அவரது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு குடித்துவிட்டு வந்து தாய் முனியம்மாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காத்தவராயன் முனுசாமியை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு மருமகன் ராஜேஷ் உதவியுடன் கல்லைக்கட்டி குளத்தில் போட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.