சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது காரின் பின்னால் பணமரத்துப்பட்டி அதிமுக ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதனின் கார் அதிவேகமாக சென்றது. அப்போது, சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதியது. இதில், இடித்து தூக்கி வீசப்பட்ட நிலையில், பைக்கில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.