கேரளா: எர்ணாகுளத்தில் 6 வயது சிறுமியை சித்தி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜாஸ் கான் என்பவரின் மகள் முஸ்கான் டிச.19 அன்று காலை தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, போஸீஸார் நடத்திய விசாரணையில் அஜாஸ் கானின் 2-வது மனைவி அனீஷா சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. உள்ளூர் சூனியக்காரரான நௌஷாத், அனீஷாவை கொலை செய்ய தூண்டியதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.