ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தை சேர்ந்தவர் துவாரபுடி மௌனிகா (16). இவர் தனது வீட்டின் வராண்டாவில் சேரில் அமர்ந்திருக்கிறார். அப்போது பாம்பு ஒன்று மௌனிகாவின் காலில் கடித்துள்ளது. மயக்கமடைந்த மௌனிகாவை குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர், ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். மகள் இறந்ததால் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறினர்.