தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 7.5 ஆக பதிவு

58038பார்த்தது
தைவானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, மக்கள் பீதியில் ஓடினர். இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். உயிரிழப்புகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி