சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள போலீஸ் நாய் ஒன்று, வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றி வருகிறது. இந்நிலையில், பணியின் போது தூங்கியதாலும், உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்ததாலும் அந்த நாய்க்கு போலீஸ் தண்டனை வழங்கியுள்ளது. வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டதோடு, கூடுதல் தின்பண்டங்களும் மறுக்கப்பட்டுள்ளது.