மார்பர்க் வைரஸ் (marburg) அல்லது ‘ரத்தப்போக்கு கண் வைரஸ்' என்று அழைக்கப்படுகிற புதிய வைரஸ், ஒன்று, உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டைப்புண், சொறிசிரங்கு, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரில் சுமார் 50% பேர் உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது. இந்த கொடூர வைரஸுக்கு தடுப்பூசிகள் அல்லது தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை.