1990-களின் படி உலகம் முழுவதும் 5 கோடி கழுகுகள் இருந்தது. சில ஆண்டுகளாக கழுகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கழுகுகள் வேட்டையாடி தின்னக் கூடியதும், பாக்டீரியா மற்றும் தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்கன் எக்கனாமிக் அசோசியேசன் என்கிற பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.