மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் ரோட்டில் நிற்கும் போது தான் ஆய்வுக்கு செல்வீர்களா? அரசாங்கத்தை நடத்திவரும் நீங்கள் இந்த வேலைகளை எல்லாம் 6 மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டாமா? கூட்டணி என்று 100 கட்சிகளை கையில் வைத்துக்கொண்டு இனிமேலும் மக்களை நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது. நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன் என வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.