தென்னாபிரிக்காவின் நமீபியாவில் கடும் வறட்சி காரணமாக மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் பசியை போக்குவதற்கு 83 யானைகள், 30 நீர்யானைகள், 60 காட்டெருமைகள், இம்பாலா மான்கள் 50, வரிக்குதிரைகள் 300, காட்டு மாடுகள் 100 என மொத்தம் 723 விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க போவதாக நமீபியா அரசு அறிவித்தது. வறட்சி நீடித்தால் உலக நாடுகளும் இது போன்ற சூழலுக்கு தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.