பால் மூலம் வைரஸ் பரவல்... மக்களுக்கு எச்சரிக்கை!

26352பார்த்தது
பால் மூலம் வைரஸ் பரவல்... மக்களுக்கு எச்சரிக்கை!
H5N1 எனப்படும் பறவை காய்ச்சல் வைரஸ் கறந்த பாலில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1 வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கறந்த பாலை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுத்திகரிக்கப்பட்ட பாலை மட்டுமே அருந்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் வாத்துகள் மூலம் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா எல்லையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி