ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை கண்கவர் முறையில் பிரான்ஸ் ஏற்பாடு செய்தது. இந்திய நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு கொண்டாட்டங்கள் தொடங்கியது. 6 கிமீ நீளமுள்ள செயின் நதிக்கரையில் நடந்த 'பரேட் ஆஃப் நேஷன்ஸ்' நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் படகுகளில் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். ஐஓசி தலைவரின் உரைக்குப் பிறகு, போட்டிகள் தொடங்கப்படும் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார்.