இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சைவ திருத்தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள விஸ்வேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காசி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வாரணாசி கோவிலை சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களுடன், அரசியல், திரைப் பிரபலங்களும் விஸ்வேஸ்வரரை தரிசனம் செய்ய வந்திருந்தனர்.