தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை

79பார்த்தது
தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு வரும் செப். 19, 21, 23, 26, 28, 30 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மறுமார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு செப்.20, 22, 24, 27, 29 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் காலை 10.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி