பெற்ற தாயை விரட்டி விரட்டி தாக்கிய மகன் (வீடியோ)

1074பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சமீபத்திய கொடூரம் நடந்துள்ளது. துர்கேஷ் சர்மா என்ற நபர் தனது தாயை கட்டையால் தாக்கியுள்ளார். பெற்ற தாய் வயதானவர் என்றும் பாராமல் கட்டையால் விரட்டி விரட்டி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அந்தப் பெண் தன் மகனிடமிருந்து தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார். ஆனாலும் துர்கேஷ் தனது தாயை பின்தொடர்ந்து இரக்கமில்லாமல் தாக்கினார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி