பாஜகவில் இணையும் பிரபல நடிகை

84பார்த்தது
பாஜகவில் இணையும் பிரபல நடிகை
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரபல கன்னட நடிகை சுமலதா பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் சுமலதாவுக்கு பாஜக மறைமுகமாக ஆதரவு அளித்து அவரை வெற்றி பெற வைத்தது. எனவே இந்த முறையும் அதே தொதியில் போட்டியிட அவர் விரும்பினார். ஆனால் மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மஜகவுக்கு ஒதுக்கப்பட்டு குமாரசாமி போட்டியிடுகிறார். எனவே சுமலதா மீண்டும் சுயேட்சையாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார்.