தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எல்.முருகன் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்ட அவர், வருகிற மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். 2வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகி இருக்கும் எல்.முருகன், மீன்வளம், கால்நடை, பால்வள அமைச்சம், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றின் இணை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.