தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும்

61பார்த்தது
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும்
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும் (04.02.2024) நாளையும் (05.02.2024) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி