தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, ரூ.7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவை சுங்கத்துறையின் மோப்பநாய் கண்டறிந்தது. சென்னையைச் சேர்ந்த 30 வயது நபர், இதனை கடத்தி வருவதற்காக சுற்றுலா விசாவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் சிக்கியது தெரிந்ததும் கஞ்சாவை வாங்கிச் செல்ல வந்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.