ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிவகார்த்திகேயன்

68பார்த்தது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்களின் ரசிகர் மன்ற உறுப்பினர்களை அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ரஜினி தொடங்கி அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்தவகையில், சென்னை போரூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் உரையாடிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துவத்து குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி