திருப்பத்தூரில் கணித அறிவியல் கண்காட்சி

78பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளியில் விஷன் எம்பவர் என்ற தனியார் கொண்டு நிறுவனத்தின் சார்பாக கணிதத்துடன் கூடிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் சோதனைகள், கணிதம் தொடர்பான கணக்கிட்டு சிந்தனையை வளர்க்கும் விளையாட்டுக்கள், சுற்றுச்சூழலை காப்போம் என்ற தலைப்பில் நாடகம், பாடல், நடனம், நெருப்பில்லாத சமையல் என்று பல்வகையான நிகழ்வுகள் பார்வையற்ற மாணவ மாணவிகளால் பார்வையுள்ள மாணவ மாணவிகளுக்கு நடத்தி காண்பிக்கப்பட்டது. சாதிக்க பார்வையின்மை ஒரு தடை இலலை என்பதனை அழுத்தமாக உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் பார்வையற்ற மாணவ மாணவிகளின் திறமைகள் வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் பெர்ஸி ரேணுகா, தலைமை ஆசிரியை மீனாள், எம்பவர் தனியார் கொண்டு நிறுவனத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து இந்த அறிவியல் கண்காட்சியை சிறப்பாக நடத்தினர். காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் வந்திருந்து கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி