இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 கடந்த 16. 03. 2024-அன்று அறிவிக்கப்பட்டு, அன்றைய தினம் முதல், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. அதனைத்தொடர்ந்து, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024க்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 04. 06. 2024 அன்று சிறப்பாக நிறைவுற்றுள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 06. 06. 2024 அன்று அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகின்ற திங்கட்கிழமை (10. 06. 2024) அன்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை, அன்றைய தினம் பதிவு செய்து, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து, தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.