சிவகங்கை: முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கைது

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் பகுதியில திடீரென சோதனையில் ஈடுபட்ட திருப்பத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வைரமணி, புதுத்தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சார்பு ஆய்வாளர் வைரமணி உள்ளிட்ட போலீசார் அங்கு திடீரென சோதனையை மேற்கொண்ட போது, சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திருப்பத்தூர் கணேஷ் நகரை சேர்ந்த ஆறுமுகம் (51), கோட்டையிருப்பு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும் தற்போது தி. மு. க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகவடிவேல் (60) கல்லுவெட்டு மேடு பகுதியை சேர்ந்த சாரதி (47) யூனியன் ஆபீஸ் பின்புறம் உள்ள முத்துவயிறு (57) ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூபாய் 2000 பணத்தையும், இரண்டு இரு சக்கர வாகனங்களையும் கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு பின்னர் காவல் நிலைய பிணையில் திமுக ஒன்றிய செயலாளர் சண்முகவடிவு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த ஊரில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக ஒன்றிய செயலாளரை போலீசார் கைது செய்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி