குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 49மனுக்களுக்கு தீர்வு

1913பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் புகார் மனுக்கள் தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து தமிழக டி. ஜி. பி சங்கர் ஜிவால், அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் வழிகாட்டுதலின்பேரில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி கே அரவிந்த் ஆகியோர் தலைமையில் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் மனு குறை தீர்ப்பு நாள் கூட்டம் சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ் குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 49மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


இதில் கூடுதல்காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி