வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர் விஜயகாந்த்!

58592பார்த்தது
வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர் விஜயகாந்த்!
வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர் விஜயகாந்த் என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த மண் உள்ளவரை அவரை யாருமே மறக்க முடியாது. வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர், விதிவசத்தால் நம்மை விட்டு போய் விட்டார். அவருடன் 3 படங்களில் நான் நடித்துள்ளேன். அவர் செய்த தான தர்மத்திற்கு அளவே கிடையாது. அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று உருக்கமாக தெரிவித்தார். நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி