மாளவிகாவுக்கு விமானத்தில் கசப்பான அனுபவம்!

47249பார்த்தது
மாளவிகாவுக்கு விமானத்தில் கசப்பான அனுபவம்!
நடிகை மாளவிகா மோகனனுக்கு விமான நிலையத்தில் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தன்னை அவமதித்ததாகவும், தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார். இண்டிகோ சேவை சரியில்லை என்று ட்வீட் செய்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ கணக்கை டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த இண்டிகோ, 'இப்படி நடந்ததற்கு வருந்துகிறோம். நாங்கள் இது குறித்து சரிபார்த்து, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளது.