நாடாளுமன்றத் தேர்தல் - தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை!

62118பார்த்தது
நாடாளுமன்றத் தேர்தல் - தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை அதற்கான பணியை தொடங்கியுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை ஜனவரஜ 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சொந்த ஊரிலும், தொடர்ந்து 3 வருடம் ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.