மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
காங்கிரஸ் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. பொதுத்தேர்தலில் கட்சி கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகளின்
இந்தியா கூட்டணியில் அந்தந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு எடுக்கப்படும் கூறப்படுகிறது. இந்த கூட்டணியில்
காங்கிரஸ்,
திமுக, திரிணாமூல்
காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி, என்சிபி, ஆர்ஜேடி, ஜேடியு உள்ளிட்ட 26 கட்சிகள் உள்ளன.