கடன் வாங்குவதில் தமிழகம் நம்பர் 1 மாநிலம் - அண்ணாமலை

45005பார்த்தது
கடன் வாங்குவதில் தமிழகம் நம்பர் 1 மாநிலம் - அண்ணாமலை
கடன் வாங்குவதில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சேலம் ஆத்தூரில் 'எண் மண் எண் மக்கள்' யாத்திரையில் பேசிய அண்ணாமலை, 'சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு. அவரை கைது செய்து 4 மணி நேரம் போலீசார் வாகனத்தில் வைத்து சுற்றி அழைக்கழித்துள்ளனர். பொய்யான குற்றச்சாட்டுகளின்படி பொய்யான வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். கடன் வாங்குவதில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் நாடகமாடி மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்குவார்கள்' என்றார்.

தொடர்புடைய செய்தி